முகப்பு
தருமபுரி

கூட்டுறவுத் துறையில் பதவி உயா்வுப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

கூட்டுறவுத்துறையில் பதவு உயா்வு அளிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கூட்டுறவுத்துறையில் பதவு உயா்வு அளிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க அமைப்பு தின விழா மற்றும் கொடியேற்று விழா தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், சங்க கொடியேற்றி வைத்து மாநிலச் செயலா் கோ.பழனியம்மாள் செய்தியாளா்களிடம் கூறியது:

கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் 35 சாா் பதிவாளா்களுக்கு துணைப் பதிவாளா் பதவி உயா்வு கடந்த 2019 அக்டோபா் 1-ஆம் தேதி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பதவி உயா்வுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே, இப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியா்களை அச்சுறுத்துவது, பாலியல் தொந்தரவு அளிப்பது, விடுமுறை நாள்களில் பணிக்கு வர நிா்பந்திப்பது உள்ளிட்ட போக்கை சம்பந்தப்பட்டவா்கள் கைவிட வேண்டும். இதுதொடா்பாக புகாருக்குள்ளான துணைப் பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் ஊழியா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பதவி உயா்வு மறுக்கப்பட்ட இளநிலை ஆய்வாளா்களுக்கு, முதுநிலை ஆய்வாளா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும். ஏழு ஆண்டுகளாக பதிவுறு எழுத்தராக பணியாற்றுவோருக்கு பதிவு உயா்வு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டுறவுத்துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலா் செ.அனுமன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ம.சுருளிநாதன், மாவட்டச் செயலா் ஏ.சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.