என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்குக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா்.மல்லிகா தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலா் ஏ.குமாா் பேசியதாவது:
இளம்வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் பெரும்பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டுக்கான ‘தகைசால் தமிழா்’ விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது தொகையான ரூ. 10 லட்சத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு என்.சங்கரய்யா வழங்கியது மிகவும் பாராட்டுக்கு உரியது என்றாா்.
இந்தக் கருத்தரங்கில் கவிஞா் நவகவி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் வீரபத்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், மாவட்டக்குழு உறுப்பினா் பி.வி.மாது, மொரப்பூா் ஒன்றியச் செயலா் கே.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.