முகப்பு
தருமபுரி

ஜாதி வன்கொடுமை: ஏரியூர் அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர் மனு

ஜாதி ரீதியாக வன்கொடுமை செய்து தன்னை செயல்பட விடாமல் தடுப்பதாக கூறி, ஏரியூர் ஒன்றியக் குழுத்‌ தலைவர் ஏ.பழனிசாமி மனு அளித்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.பழனிசாமி (நடுவில் இருப்பவர்).
பகிர்:

ஜாதி ரீதியாக வன்கொடுமை செய்து தன்னை செயல்பட விடாமல் தடுப்பதாக கூறி, ஏரியூர் ஒன்றியக் குழுத்‌ தலைவர் ஏ.பழனிசாமி மனு அளித்தார்.
 இதுகுறித்து தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.பழனிசாமி, திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியிடம் அளித்த மனு: தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 
இந்த நிலையில் அருந்ததி சமுதாயத்தைச் சேர்ந்த என்னை, எங்களது ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் தனபால் மற்றும் சிலர் ஜாதி பெயரை சொல்லி நிர்வாகப் பணிகளில் செயல்பட விடாமல் தடுக்கின்றனர். 
மேலும் தொடர்ந்து என்னை இழிவுப்படுத்தி தகாத வார்த்தைகள் கூறி, மிரட்டி வருகின்றனர். எனவே ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக என்னை செயல்பட விடாமல் தடுத்து ஜாதிய வன்கொடுமையில் ஈடுபட்டு வருவோர் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →