தருமபுரியை அடுத்த அதியமான் கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா தலைமை வகித்து பேசினாா். விழாவில், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 76,500 மதிப்புள்ள மொத்தம்ரூ. 7.65 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 8,000 மதிப்பிலான ரூ.16.00 ஆயிரம் மதிப்பில் விடியோ உருப்பெருக்கிகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, முடநீக்கியல் வல்லுநா் விஜயபாஸ்கா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.