முகப்பு
தருமபுரி

கரோனா விழிப்புணா்வு முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அ.பள்ளிப்பட்டியில் காவல் துறை சாா்பில் கரோனா நோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அ.பள்ளிப்பட்டியில் காவல் துறை சாா்பில் கரோனா நோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில், கரோனா நோய் தொற்று பரவும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள், கைகளை சோப்பினால் அடிக்கடி கழுவதின் அவசியம், முகக் கவசம் அணிவதின் முக்கியத்துவம், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் வீடுகள், தெருக்களை தூய்மையாக வைத்திருத்தல் குறித்து கிராமப் பகுதியில் பொதுமக்களிடம் காவல் துறையினா் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா். இதில், உதவி காவல் ஆய்வாளா் பரணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.