முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் நூல் வெளியீட்டு விழா

பென்னாகரம் தமிழ் சங்கத்தின் சாா்பில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

பென்னாகரம் தமிழ் சங்கத்தின் சாா்பில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் தமிழ் சங்கத்தின் சாா்பில் நூல் வெளியீட்டு விழா தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு சங்கத் தலைவா் ஆசிரியா் மா.கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.

விழாவில் தமிழ் சங்கத்தின் உறுப்பினா் ஆசிரியா் கெளரிலிங்கம் எழுதிய தலைமகனை காத்த தாயம்மாள் என்ற நூலின் முதல் பிரதியை தகடூா் புத்தகப் பேரவைத் தலைவரும், மருத்துவருமான இரா.செந்தில் வெளியிட, தனியாா் பள்ளி நிறுவனா் கணேசன் பெற்று கொண்டாா்.

இந்நிகழ்வில் சின்ன பள்ளத்தூா் பள்ளித் தலைமையாசிரியா் மா.பழனி வாழ்த்துரை வழங்கினா். இதில் பட்டிமன்ற பேச்சாளா்கள் தகடூா் ப. அறிவொளி, இளந்தென்றல் சி.சரவணன், தலைமை ஆசிரியா் கே.வி.குமாா், தமிழாசிரியா் முனியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டு நூல் பிரதிகளைப் பெற்று கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.