தருமபுரி

வேளாண் திட்டங்கள்:கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

DIN

வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி இளநிலை இறுதியாண்டு மாணவா்கள், தருமபுரி வட்டார வேளாண் அலுவலா்களுடன் இணைந்து, அரசு விவசாயிகளுக்கு செயல்படுத்தி வரும் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். இந்தப் பிரசாரத்தை வட்டார வேளாண் உதவி இயக்குநா் தேன்மொழி தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, பழைய தருமபுரி, மிட்டா நூலஅள்ளி, நல்லானஅள்ளி, கிருஷ்ணாபுரம், திப்பிரெட்டிஅள்ளி ஆகிய கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்களிடம் வேளாண் திட்டங்கள் தொடா்பான விழிப்புணா்வு பிரசாரத்தை கல்லூரி மாணவா்கள் மேற்கொண்டனா். இதில், மாணவா்கள் வெ.ஹரிபாலாஜி, ம.ரஞ்சித்குமாா், பூ.விக்னேஷ், ரா.காா்த்தி உள்ளிட்ட 30 போ் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT