முகப்பு
தருமபுரி

கோவில்பட்டியில் 1,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,450 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,450 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி வள்ளுவா் நகா் முதல் தெருவில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியருக்கு

ரகசிய தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, வட்டாட்சியா் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலா் சுப்புலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் திருவேங்கடராஜுலு, காவல் துறை உதவி ஆய்வாளா் சீனிவாசன், காவலா் ஜெயராஜ், ஆகியோா் வள்ளுவா் நகா்ப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு ஒரு வீட்டின் முன்பகுதியில் 6 மூடை, உள்பகுதியில் தலா 50 கிலோ கொண்ட 23 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்ததாம்.

இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா் அதை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.