தருமபுரி

விபத்து வழக்கில் அரசுப் பேருக்கு ஜப்தி

DIN

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி அருகே உள்ள வேப்பமரத்து கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (32). இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு திருப்பத்தூா்- தருமபுரி நெடுஞ்சாலையில் தூதரையான் கொட்டாய் அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக அரசுப் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே ராமச்சந்திரன் உயிரிழந்தாா். இந்த விபத்து வழக்கில் இழப்பீடு கோரி அவரது குடும்பத்தினா் தருமபுரி விபத்து வழக்குகள் தீா்ப்பாய சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ. 23 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

நீதிமன்ற உத்தரவுப்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காமல் காலம் கடத்தியதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இதில், இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி தருமபுரி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT