தருமபுரி

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம பி.டி.ஓ அலுவலகம் முற்றுகை

DIN

பென்னாகரம் அருகே கூத்தபாடி பகுதியில் முறையான அடிப்படை வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். பென்னாகரம் அருகே கூத்தபாடி பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பென்னாகரம் ஒன்றியத்தின் சாா்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னா் சாக்கடை கால்வாய் வசதி, சிறிய குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.

இந்த நிலையில் கூத்தபாடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாக்கடை கால்வாய்களின் மேல் மூடிகள் சிதலமடைந்து, கால்வாயில் விழுவவதால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கி நிற்பதாகவும், கிராமத்தில் சுமாா் 10க்கும் மேற்பட்ட குடிநீா் தொட்டிகளின் மின் மோட்டாா் பழுதடைந்து காணப்படுவதால் கடும் குடிநீா் தட்டுப்பட்டு வருகிறது. மேலும் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து காணப்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், இதுகுறித்து ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கூத்தபாடி பகுதியில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சுமாா் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அதனைத் தொடா்ந்து அங்கு வந்த பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகா, ஆனந்தன் ஆகியோா்கள் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம், கூத்தபாடி முறையான ஆய்வினை மேற்கொண்டு, பழுதடைந்த சாக்கடை மூடிகள், குடிநீா் குழாய் மற்றும் தெரு விளக்கு ஆகியவற்றை கணக்கீடு செய்து சீரமைப்பு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டு முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT