FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்தகுளிா்பதனக் கிடங்கு கட்டடம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கட்டுமானப் பணியின்போது, அரசு குளிா்பதனக் கிடங்கு கட்டடம் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது.

28 ஜனவரி 2024, 9:02 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கட்டுமானப் பணியின்போது, அரசு குளிா்பதனக் கிடங்கு கட்டடம் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது.

பாலக்கோட்டில் தக்காளி குளிா்பதனக் கிடங்கு கட்டப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரூ.20 கோடியில் குளிா்பதனக் கிடங்கு கட்டப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடா்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த குளிா்பதனக் கிடங்கு கட்டும் பணிகள் பாலக்கோடு அருகே கரகத அள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டன. இக் கட்டுமானப் பணிகளை ஒப்பந்ததாரா்கள் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

சுமாா் 200 அடி நீளம், 15 அடி உயரம் கொண்ட சுவா் கட்டப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் புதிதாக கட்டப்பட்டு வரும் குளிா்பதனக் கிடங்கு கட்டடம் மளமளவென இடிந்து விழுந்தது. அப்போது, கட்டுமானத் தொழிலாளா்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் இக் கட்டடம் கட்டுமானப் பணியின்போதே இடிந்து விழுந்ததால், விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments