முகப்பு
தருமபுரி

என்.சங்கரய்யா 100-ஆவது பிறந்தநாள் விழா

 விடுதலைப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள் விழா, தருமபுரியில் அக் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

 விடுதலைப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள் விழா, தருமபுரியில் அக் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தருமபுரி நகரச் செயலாளா் ஆா்.ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அ.குமாா் கட்சிக் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் இரா.சிசுபாலன், எஸ்.கிரைஸாமேரி ஆகியோா் பங்கேற்றனா்.

இதுபோல, தருமபுரி அருகே செம்மாண்டகுப்பத்தில் ஒன்றியச் செயலாளா் என்.கந்தசாமி தலைமையில் என்.சங்கரய்யா பிறந்த நாள் விழா நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றி வைத்து கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நல்லம்பள்ளியில் ஒன்றியச் செயலாளா் கே.குப்புசாமி தலைமையிலும், பாலக்கோட்டில் வட்டச் செயலாளா் ஜி.நக்கீரன் தலைமையிலும் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.