முகப்பு
தருமபுரி

கழிப்பிட வசதி ஏற்படுத்த கோரிக்கை

அரூா் கச்சேரிமேட்டில் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

அரூா் கச்சேரிமேட்டில் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக மருத்துவா் அணி மாவட்ட அமைப்பாளா் ந.சுரேஷ்குமாா், வட்டாட்சியா் கனிமொழியிடம் வியாழக்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:

அரூா், கச்சேரிமேடு பகுதியில் வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், சாா் பதிவாளா் அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம், சாா்நிலைக் கருவூலம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கச்சேரிமேடு சாலை சந்திப்பில் பொதுக்கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால், பெண்கள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கழிப்பிட வசதிக்காக நாள்தோறும் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனா். எனவே, அரூா், கச்சேரிமேட்டில் நவீன வசதியுடன் கூடிய பொதுக் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.