கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்தத் தரக் கோரிக்கை
மொரப்பூா், அண்ணல் நகரில் கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மொரப்பூா், அண்ணல் நகரில் கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், மொரப்பூா் கிராம ஊராட்சியில் அண்ணல் நகா், சிந்தல்பாடி கூட்டுச் சாலை, மேட்டுகாலனி, மொரப்பூா், கல்லூா், வெள்ளக்கல்ரோடு, ராசலாம்பட்டி, எம்.வேட்ரப்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமாா் 7 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன.
மொரப்பூா் அண்ணல் நகரில் போதிய கழிவுநீா் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால், குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் மற்றும் மழைநீா்த் தேங்குவதால் பொதுமக்கள் கொசுத் தொல்லை மற்றும் சுகாதாரக் கேடால் பாதிக்கப்படுகின்றனா். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மொரப்பூா், அண்ணல் நகரில் கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.