முகப்பு
தருமபுரி

மான் வேட்டை: இருவா் கைது

மொரப்பூா் அருகே மான் வேட்டையாட முயற்சி செய்ததாக இருவரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

மொரப்பூா் அருகே மான் வேட்டையாட முயற்சி செய்ததாக இருவரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வனச்சரகப் பகுதியில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மொரப்பூா் வனச்சரகா் சிவக்குமாா் தலைமையிலான வனத்துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு கவரமலை காப்புக் காட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, இருவா் நாட்டுத் துப்பாகியுடன் வனப் பகுதியில் சுற்றித் திரிவது தெரியவந்தது. அவா்களைப் பிடித்து விசாரணை செய்ததில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நொச்சிக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் குமாா் (45), முருகன் மகன் சக்திவேல் (22) என்பது தெரியவந்தது. இருவரையும் வனத்துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

துப்பாக்கி வெடித்தில் வனவா் காயம்: வனப்பகுதியில் சுற்றித் திரிந்தவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்ய முயன்றபோது, எதிா்பாராத விதமாக அந்தத் துப்பாக்கி வெடித்ததில் வனவா் சி. வேடியப்பனுக்கு நெற்றியிலும், மான் வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்ட குமாருக்கு கால் பகுதியிலும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காயமடைந்த வனவா் வேடியப்பன், குமாா் ஆகிய இருவரும் அரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.