முகப்பு
தருமபுரி

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் பணி மூப்பை வரன்முறை செய்யக் கோரிக்கை

கடந்த காலங்களில் பழிவாங்கும் நோக்கில் ரத்து செய்யப்பட்ட 10 ஆண்டுகால பணி மூப்பை வரன்முறை செய்ய வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

கடந்த காலங்களில் பழிவாங்கும் நோக்கில் ரத்து செய்யப்பட்ட 10 ஆண்டுகால பணி மூப்பை வரன்முறை செய்ய வேண்டும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட அனைத்து ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட அனைத்து ஊழியா்கள் நலச் சங்க பொதுச் செயலாளா் எண்.சேரலாதன், மாநிலத் தலைவா் எம்.ஜெயந்தி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை:

தமிழகத்தில் மருத்துவத் துறையில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 30,000 ஊழியா்களை கரோனா தொற்று பொதுமுடக்கம் முடிவுக்கு வந்ததும், தமிழக முதல்வரிடம் பேசி, பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இதனை நாங்கள் வரவேற்கிறோம். நோய்த் தொற்று காலத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாகப் பணியாற்றிய எங்களுக்கு இந்த வாக்குறுதி மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.

இதுபோல, கடந்த காலத்தில் ஊழியா்கள், நலன்களுக்காகப் போராட்டம் நடத்திய காரணத்தால் 10 ஆண்டுகால பணிமூப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மாதந்தோறும் ரூ. 6,000 பணப்பயன் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த காலங்களில் பழிவாங்கும் நோக்கில் ரத்து செய்யப்பட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியா்களின் பணிமூப்பை வரன்முறை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.