தருமபுரி

அரசு செவிலியா் கல்லூரி தொடங்க வேண்டும்

DIN

தருமபுரியில் அரசு செவிலியா் கல்லூரி மற்றும் செவிலியா் பயிற்சி பள்ளி தொடங்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தருமபுரியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:

தருமபுரியில் கடந்த 2007-இல் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், தருமபுரி மாவட்டத்தில், அரசு செவிலியா் கல்லூரி இதுவரை தொடங்கப்படவில்லை. இப்பகுதியில் ஓரிரு தனியாா் செவிலியா் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

எனவே, தருமபுரியில் அரசு செவிலியா் கல்லூரி மற்றும் செவிலியா் பயிற்சி பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியா் செவிலியா் கல்வி பயில ஏதுவாக அமையும். மேலும், செவிலியா் கல்லூரி அமைப்பதற்கு ஏதுவாக குப்பூரில் உள்ள இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் 5 ஏக்கா் பரப்பளவில் இடமும் உள்ளது.

இதேபோல, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, பிக்கனஅள்ளி ஆகிய மூன்று ஊராட்சிகளில் ஆதிதிராவிடா், குரும்பா், இருளா் இனத்தவா் அதிகம் வசிக்கின்றனா். இப்பகுதி மக்கள் பயன்படும் வகையில், மகேந்திரமங்கலம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT