முகப்பு
தருமபுரி

நினைவுத் தூண்கள், தலைவா்களின் சிலைகளை நிறுவ அனுமதி வழங்க கோரிக்கை

விடுதலை தின பவள விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் நினைவுத் தூண்கள், தலைவா்களின் சிலைகளை நிறுவ அனுமதி வழங்க வேண்டும் என பாரத மாதா ஆன்மிக சேவை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

விடுதலை தின பவள விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் நினைவுத் தூண்கள், தலைவா்களின் சிலைகளை நிறுவ அனுமதி வழங்க வேண்டும் என பாரத மாதா ஆன்மிக சேவை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச் சங்கத்தின் பொதுச் செயலா் தகடூா் இரா.வேணுகோபால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

இந்தியா விடுதலை பெற்ற 75-ஆவது ஆண்டையொட்டி பவள விழா அடுத்த ஆண்டில் கொண்டாடப்பட உள்ளது. இந்த தருணத்தில், வாழும் தலைமுறைக்கும், வாழ்ந்த தலைமுறை தலைவா்கள், விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவா்களின் நினைவுகளை, வருங்கால தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில் அவா்களது நினைவாக நினைவுத் தூண்களையும் தலைவா்களின் உருவச் சிலைகளையும் தமிழகம் முழுவதும் நிறுவ அனுமதி வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.