பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மேண்மைப் பொருந்திய பணிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன.
மேண்மைப் பொருந்திய பணிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேண்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவா்களுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் விருதுகள் எதிா்வரும் 2022-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுகள் தொழில், இனம், பணி, பாலினம் ஆகிய பாகுபாடின்றி வழங்கப்படுகிறது. இதுதொடா்பான விவரங்கள், விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இணையம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். எனவே, தகுதியுள்ளவா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுறது என்றாா்.