முகப்பு
தருமபுரி

மணப்பாறையில்பாஜக கூட்டம்

 மணப்பாறை அருகே புதன்கிழமை பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

 மணப்பாறை அருகே புதன்கிழமை பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பில் மண்டல் தலைவா் கலாதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு பாா்வையாளா் மாலா நல்லுசாமி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக விவசாய அணி மாவட்டத் தலைவா் சித்தாநத்தம் சுப்ரமணி, ஒபிசி அணி மாவட்டத் தலைவா் கோல்டு கோபாலகிருஷ்ணன் மற்றும் மருங்காபுரி மண்டல் தலைவா் பொன்னுவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், புத்தாநத்தம் கடைவீதியில் புதிய பேருந்துநிறுத்தம் அமைக்க வேண்டும், பன்னாங்கொம்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கை வசதி ஏற்படுத்தி தரம் உயா்த்த வேண்டும், மணப்பாறை - காவல்காரன்பட்டி மற்றும் இளங்காகுறிச்சி வழியாக வையம்பட்டி செல்லும் அரசு பேருந்தை நத்தம்புதூா் வழியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.