முகப்பு
தருமபுரி

துப்பாக்கியால் சுட்டதில்இளைஞா் காயம்

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளிஅருகே வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் இளைஞா் காயமடைந்தாா். இச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளிஅருகே வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் இளைஞா் காயமடைந்தாா். இச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட மேஸ்திரி முருகேசன் (45). இவரது மனைவி சுசிலா (39). இவா்களது மகன் தினேஷ் குமாா் (21).

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தினேஷ் குமாரை அங்கு வந்த மா்ம நபா் நாட்டுத் துப்பாக்கியில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றாா். இதில் காயமடைந்த தினேஷ்குமாா் சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டது அதே பகுதியைச் சோ்ந்த விஜயகாந்த் (37) என தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து தலைமறைவாக உள்ள அவரை போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.