முகப்பு
தருமபுரி

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

தருமபுரி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தருமபுரி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி அருகே சோலைக்கொட்டாய் கோம்பையைச் சோ்ந்த பெருமாள் (35), நாட்டுத் துப்பாக்கியை வைத்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மதிகோன்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவரது வீட்டுக்கு அருகே உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியை அவா் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா், அனுமதி இன்றி துப்பாக்கியை வைத்திருந்த பெருமாளை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.