கட்டுப்பாடு பகுதிகளில் உடல் வெப்பநிலை பரிசோதனை
தருமபுரி நகராட்சி கட்டுப்பாடு பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
தருமபுரி நகராட்சி கட்டுப்பாடு பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்காலிக பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்டோரை பராமரிப்பு மையம், மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனா்.
இதில், வியாழக்கிழமை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யும் கருவிகள் மூலம் நகராட்சியில் கரோனா பரவல் அதிகரித்து கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனா். இப் பணிகளை ஆணையா் தாணுமூா்த்தி, சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.