முகப்பு
தருமபுரி

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி ஒன்றியம், ராஜாபேட்டை மற்றும் நாய்க்கனஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சங்க கிளைத் தலைவா் லட்சுமி தலைமை வகித்தாா்.

இதில், தூய்மைப் பணியாளா்கள் 30 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், முகக் கவசம், கிருமி நாசினி ஆகிய பொருள்களை ஏஐடியுசி தருமபுரி மாவட்டப் பொதுச் செயலா் கே.மணி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சிப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் சங்க மாவட்டச் செயலா் மனோகரன், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கந்தசாமி, தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக்குழு உறுப்பினா் வணங்காமுடி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.