முகப்பு
தருமபுரி

ஜங்கமையனூா் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

பென்னாகரம் வட்டம், ஜங்கமையனூா் நியாயவிலைக் கடை விற்பனையாளா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பென்னாகரம் வட்டம், ஜங்கமையனூா் நியாயவிலைக் கடை விற்பனையாளா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து நாகனூா் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் ஜங்கமையனூா் பகுதி நேர நியாயவிலைக் கடையினை வேலை நாள் அல்லாத கடந்த 17-ஆம் தேதி, உயா் அலுவலா்களின் அனுமதி பெறாமல் திறந்து குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை ரூ. 2,000 மற்றும் அரிசியை வழங்கியுள்ளாா். அப்போது, சிறப்பு நிவாரணப் பொருள்கள் பெற பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனா். இது தொடா்பாக புகாா் வரப்பெற்றதைத் தொடா்ந்து, ஜங்கமையனூா் நியாயவிலைக் கடை விற்பனையாளா் முருகன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறாா். இவருக்கு குற்றச்சாட்டு குறிப்பு ஆணை பின்னா் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.