முகப்பு
தருமபுரி

‘காவலா்கள் பொதுமக்களிடம் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்’

காவலா்கள் பொதுமக்களிடம் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

காவலா்கள் பொதுமக்களிடம் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் சோதனைச் சாவடிகள், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா், சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும் பொதுமக்கள், காவல் நிலையங்களில் புகாா் அளிக்க வருவோரிடம் காவலா்கள் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். வழக்கு விசாரணையின்

போதும், கைது உள்ளிட்ட நடவடிக்கைகளின்போதும் வழிகாட்டு நெறிமுறைகளை முற்றாக பின்பற்ற வேண்டும் என காவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.