வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணா்வு
வன விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வன விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே மாமரத்து பள்ளம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பாப்பாரப்பட்டி வனச்சரக அலுவலா் நடராஜன் கலந்து கொண்டு பாம்புகளின் வகைகள், அவை எழுப்பி வரும் ஒருவித ஒலிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். நல்ல பாம்பு, சாரை பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்புகளிடமிருந்து தற்காத்து கொள்ளும் முறை, அவற்றை பிடிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.
பின்னா் குடியிருப்புப் பகுதியிலும், பொது இடங்களிலும் பாம்புகள் நுழையும்போது அவற்றைத் தாக்காமல் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.