முகப்பு
தருமபுரி

தோ்தல் விதிமீறல்: 24 வழக்குகள் பதிவு

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அனுமதியின்றி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தோ்தல் விதிமுறைகளை மீறி சுவா் விளம்பரம் எழுதுதல், பதாகைகள் அமைத்தல், கொடிகள் கட்டப்பட்டுள்ளன எனவும், இந்த விதிமீறல்கள் மீது நடவடிக்கைக் கோரி அந்தந்தப் பகுதி பறக்கும் படை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

அதன் பேரில், தருமபுரி, அரூா், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய காவல் உள்கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் மொத்தம் 24 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.