பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், நல்லம்பள்ளி பகுதியில் 40 கிராமங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், நல்லம்பள்ளி பகுதியில் 40 கிராமங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவாடி, ஊத்துப்பள்ளம், ராமாயன சின்னஅள்ளி, பூதனஅள்ளி, லளிகம், மிட்டா ரெட்டிஅள்ளி, கோம்பேரி, சின்ன ரெட்டிஅள்ளி, தம்மணம்பட்டி, ஏரிகோடிப்பட்டி, கொமத்தம்பட்டி, மாதேமங்கலம் உள்ளிட்ட 40 கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். இதில், பாமக, அதிமுக, பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.