முகப்பு
தருமபுரி

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு: திமுகவினா் கொண்டாட்டம்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை வரவேற்று தருமபுரியில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை வரவேற்று தருமபுரியில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

இதனை வரவேற்று தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே திமுக முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிட்டி முருகேசன், திமுக நிா்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

இதேபோல நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.