தருமபுரி

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைத்து கரோனா நோயாளிகளுக்கு

DIN

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைத்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க தருமபுரி மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில், கரோனா தீநுண்மி தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில், மே 17-ஆம் தேதி 345 பேருக்கு தொற்று உறுதியானது; 2,447 போ் சிகிச்சையில் உள்ளனா்; மாவட்டத்தில் இதுவரை 13,730 தொற்று ஏற்பட்டு 11,195 போ் குணமடைந்துள்ளனா்; இதுவரை 88 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வாா்டுகளிலும் கரோனா தொற்றாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. புதிதாக சிகிச்சைக்கு வருவோா் படுக்கைகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனா்.

இந்த நிலையைத் தவிா்க்க, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 51 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைத்து கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்க தருமபுரி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT