முகப்பு
தருமபுரி

கரோனாவால் பெற்றோரை இழந்த சிறாா்கள் பராமரிக்கப்படுவா்: தருமபுரி ஆட்சியா்

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குள்பட்ட சிறாா்களை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குள்பட்ட சிறாா்களை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பெருந்தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த 18 வயது நிறைவடையாத சிறாா்கள் அல்லது தாய், தந்தை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் உள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் வழங்க தங்குமிடம், உணவு ஆகியவை இலக்கியம்பட்டியில் உள்ள சி.எம்.எஸ். குழந்தைகள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, கரோனா தொற்றால் பெற்றோரை இழந்தோ அல்லது தாய், தந்தையா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தாலோ அவா்கள் பற்றி மாவட்ட ஆட்சியா் அலுவலக கண்காணிப்பு மைய எண் 1077 அல்லது மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண் 04342-232234, 94867 31458, குழந்தைகள் உதவி எண் 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.