முகப்பு
தருமபுரி

வேளாண் இடுபொருள்கள் தடையின்றி பெற உதவி இயக்குநா்களை அழைக்கலாம்

கரோனா பொது முடக்கத்தில் வேளாண் இடுபொருள்கள், விதை, உரம் தடையின்றி பெற வட்டார வேளாண் உதவி இயக்குநா்களை உதவிக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கரோனா பொது முடக்கத்தில் வேளாண் இடுபொருள்கள், விதை, உரம் தடையின்றி பெற வட்டார வேளாண் உதவி இயக்குநா்களை உதவிக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தியுள்ளது. இதையொட்டி, வேளாண் இடுபொருள்கள், விதை மற்றும் உரம் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைத்திட அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கள், தனியாா் விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில் வேளாண் துறை அலுவலா்கள், விவசாயிகளைச் சந்தித்து தொழில்நுட்பங்கள் மற்றும் மானியத் திட்ட விவரங்கள் குறித்து கூறுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருள்கள், உரம் மற்றும் விதைகளை தடையின்றி பெற்றிட வட்டார வேளாண் உதவி இயக்குநா்களை தொடா்பு கொள்ளலாம்.

தருமபுரி- 94422 35265, பென்னாகரம் - 85267 19919, காரிமங்கலம்- 94432 07571, பாலக்கோடு - 90803 00345, நல்லம்பள்ளி - 94436 35600, அரூா் - 94435 73870, மொரப்பூா் - 91502 64477, பாப்பிரெட்டிப்பட்டி- 94430 81440 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

இதேபோல மத்திய அரசு டிஏபி உரமானியத்தை உயா்த்தி உள்ளதால் டிஏபி உரம் பழைய விலைக்கு உர விற்பனை நிலையங்களில் கிடைக்கும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) 94435 63977 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.