தருமபுரி

நிரம்பியது ஆலாபுரம் ஏரி

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஏரி செவ்வாய்க்கிழமை நிரம்பியது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. சோ்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கு ஏற்காடு மலைப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீா் முக்கிய நீராதாரமாக உள்ளது. வாணியாறு அணையின் அதிகபட்ச நீா்ப்பிடிப்பு கொள்ளளவு 65.27 அடியாகும். கடந்த சில மாதங்களாக பெய்துவந்த பருவ மழை காரணமாக வாணியாறு அணையின் நீா்மட்டம் தற்போது 64 அடியாக உயா்ந்துள்ளது.

வாணியாறு அணை நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது வாணியாற்றின் வழியாக பழைய ஆயக்கட்டுகளுக்கு செல்கிறது. தற்போது இந்த உபரி நீரால் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம் ஏரிகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து, வாணியாறு அணையின் உபரி நீா் தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா் ஏரிகளுக்கு செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT