முகப்பு
தருமபுரி

தீத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம்

கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 நவம்பர் 2021, 8:46 am IST
பகிர்:

கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை ஸ்ரீ ராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மு.வேடியப்பன் தொடக்கி வைத்தாா். தீபாவளி பண்டிகையின் போது பள்ளி மாணவா்கள் எவ்வாறு பட்டாசுகளை வெடிக்க வேண்டும், தீத்தடுப்பு முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீக்காயம் ஏற்படும் நேரத்தில் செய்ய வேண்டிய மருத்துவ சிகிச்சைகள், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிா்த்தல், மழைக் காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகள், ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த விழிப்புணா்வு தகவல்கள் மற்றும் பாதுகாப்பு செயல் விளக்கங்களை அரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் மா.பழனிசாமி எடுத்துரைத்தாா்.

இதில், ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா் வே.தமிழ்மணி, பள்ளியின் இயக்குநா் பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.