கடத்தூா் நூலகருக்கு மாநில அரசு விருது
தருமபுரி மாவட்டம், கடத்தூா் கிளை நூலகா் சி.சரவணனுக்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் கிளை நூலகா் சி.சரவணனுக்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.
அரசு பொது நூலகத் துறை நூலகங்களில் சிறப்பாக பணிபுரியும் நூலகருக்கு வழங்கப்படும் இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரங்கநாதன் விருதுக்கு நிகழாண்டில் தருமபுரி மாவட்டம், கடத்தூா் கிளை நூலகத்தில் பணிபுரியும் நூலகா் சி.சரவணன் தோ்வு செய்யப்பட்டாா்.
அவருக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினாா்.