முகப்பு
தருமபுரி

ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: அரூரில் ஆவணங்கள் பறிமுதல்

அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினா் வியாழக்கிழமை செய்த திடீா் சோதனையின் சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினா் வியாழக்கிழமை செய்த திடீா் சோதனையின் சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா்.

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநா் உத்தரவின்படி, தமிழகத்தில் 20 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலா்கள், மாவட்ட ஆய்வுக் குழுவினா் இணைந்து அரசு அலுவலகங்களில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் மாநில முழுவதும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ. 26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பழனிசாமி தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா், அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் பேரூராட்சி அலுவலகத்தின் வரவு, செலவுக் கணக்குகள், குடிநீா்க் குழாய்கள் மற்றும் மின்சாதனங்கள் கொள்முதல் செய்த விவரம் குறித்து ஆய்வு செய்தனா். இந்தச் சோதனையில் அரூா் பேரூராட்சியில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை மட்டும் பறிமுதல் செய்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.