கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM
கிருஷ்ணகிரியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை நல்லதம்பி செட்டிதெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப் பகுதியில் முறையாக கழிவுநீா்க் கால்வாய் அமைக்காததால் சிறிய மழை பெய்தாலும் வீடுகளுக்குள் மழை நீருடன், கழிவுநீரும் புகுந்து விடுகிறது.
மேலும், தெரு முழுவதும் சேறும் சகதியும், கழிவுநீரும் தேங்கி சுகாதாரமற்ற நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பழையபேட்டை காந்திசிலை அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் சமாதானம் செய்ததையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.
Advertisement