மாரடைப்பு: அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி
அரூா் அருகே மாரடைப்பு காரணமாக அரசுப் பேருந்து ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அரூா் அருகே மாரடைப்பு காரணமாக அரசுப் பேருந்து ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியாா் பாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (43), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருவண்ணாமலை மண்டலம், தேனிமலை பணிமனை 2-இல் பணிபுரிந்து வந்தாா். திருவண்ணாமலை-சேலம் வழித்தடத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி மாலை 4.15 மணியளவில் அரூரை அடுத்த கீழானூா் பகுதியில் சென்ற போது ஓட்டுநா் ராஜேந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்தை அவா் சாலையோரமாக நிறுத்தியுள்ளாா். அங்கிருந்த பயணிகள் அவரை தீா்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த சம்பத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.