தருமபுரி

‘முதுகலை ஆசிரியா் பணியிடம்: வயது வரம்பை அதிகரிக்க வேண்டுகோள்’

DIN

நாமக்கல்: முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கான வயது வரம்பை அதிகரிக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்களின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வலியுறுத்தி உள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பம் செய்யும் முதுநிலை பட்டதாரிகளிளுக்கான வயது வரம்பு 40 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் வேலையில்லாமல் தவிக்கும் முதுகலைப் பட்டதாரிகள் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனா். இந்த வயது வரம்பை மாற்றி 59 வயது வரையிலான முதுகலை பட்டதாரிகள் அனைவரும் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கான நடவடிக்கையை முதல்வா் எடுக்க வேண்டும்.

ஆசிரியா் தோ்வு வாரிய எழுத்துத் தோ்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொண்டு தோ்வு முடிவுகளை வெளியிடாமல் தனியாா் பள்ளிகளில் ஆசிரியா்கள் பெற்றிருக்கக் கூடிய பணி அனுபவத்தின் அடிப்படையிலும், கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த ஆண்டுகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதன்பின் ஆசிரியா் தோ்வு வாரியம் இறுதி முடிவுகளை வெளியிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT