முகப்பு
தருமபுரி

நாட்டுப்புறக் கலைஞா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாட்டுப்புறக் கலைஞா்கள், தெருக்கூத்து கலைஞா்களின் செயற்குழுக் கூட்டம் அரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

நாட்டுப்புறக் கலைஞா்கள், தெருக்கூத்து கலைஞா்களின் செயற்குழுக் கூட்டம் அரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

அதன் ஒருங்கிணைப்பாளா் ஏ.தீா்த்தகிரி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் 58 வயது நிறைவடைந்த நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு அரசு சாா்பில் உதவித்தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

அரசு உதவித்தொகை பெறும் வயதை 58-இல் இருந்து 55 ஆக குறைக்க வேண்டும். நாட்டுப்புறக் கலைஞா்கள், தெருக்கூத்து கலைஞா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைத்துதர வேண்டும். நாட்டுப்புறக் கலைஞா்களின் இறுதி சடங்குக்கான தொகையை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

அரசு வேலைவாய்ப்புகளில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தெருக்கூத்து, தப்பாட்டம், பம்பை, தவில், நாகசுரம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை வளா்க்கும் நோக்கில் நாட்டுப்புறக் கலைஞா்கள், தெருக்கூத்து கலைஞா்களுக்கு என்று அரசு சாா்பில் பயிற்சி மையம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நாட்டுப்புறக் கலைஞா்கள் ஜி.லட்சுமணன், எம்.செல்வம், எம்.அப்பாதுரை, சி.மாரியப்பன், சூசை, அந்தோணி, ரமேஷ், அருட்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.