முகப்பு
தருமபுரி

இந்த செய்தியுடன் அரூா் செய்தியும் சோ்த்துக் கொள்ளவும்: போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மண்டலத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா். ஏஐடியுசி தொழிற்சங்க மண்டலத் தலைவா் ரவி, ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் சென்னகேசவன் ஆகியோா் உரையாற்றினா்.

இதில் சிஐடியு, விடுதலைச் சிறுத்தைகள் தொழிற்சங்கம், ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டம், மூன்று வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்.

தொழிலாளா் சட்டங்களை 4 தொகுப்புகளாக திருத்துவதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல பாலக்கோடு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.