முகப்பு
தருமபுரி

மானிய விலையில் 50 விவசாயிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள்

தருமபுரியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 50 பேருக்கு ரூ. 13.22 லட்சம் மதிப்பிலான புல் நறுக்கும் கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

தருமபுரியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 50 பேருக்கு ரூ. 13.22 லட்சம் மதிப்பிலான புல் நறுக்கும் கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி, இலக்கியம்பட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில், தேசிய கால்நடை இயக்கம் 2020-21இன் கீழ் கால்நடை வளா்ப்போருக்கு மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து, 50 கால்நடை வளா்க்கும் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகளை வழங்கி பேசினாா்.

இதில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சி.இளங்கோவன், துணை இயக்குநா் க.வேடியப்பன், அரசு அலுவலா்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.