தருமபுரி

இண்டூா் அருகே தடுப்பணை:தருமபுரி எம்எல்ஏ ஆய்வு

DIN

இண்டூா் அருகே சுண்ணாம்பு பள்ளம் ஓடையின் குறுக்கே தடுப்பணை அமையவுள்ள இடத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தாா்.

இண்டூா் அருகே சுண்ணாம்பு பள்ளம் ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தடுப்பணை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்யுமாறு அண்மையில் அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம்) சாா்பில் எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அதிகாரிகளுடன் சுண்ணாம்பு பள்ளம் ஓடை பகுதிக்கு கடந்த ஆக. 2-ஆம் தேதி நேரில் சென்று, தடுப்பணை அமைவிடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தடுப்பணையின் தேவை மற்றும் அதன் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களின் பரப்பளவு, நிலத்தடி நீா்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தாா். ஆய்வின் போது, பாமக மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, மாநில இளைஞா் சங்கச் செயலாளா் எம்.முருகசாமி, ஒன்றியச் செயலாளா் பெ.சக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT