முகப்பு
தருமபுரி

தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காத பள்ளி வாகனங்களுக்கு அபராதம்

தருமபுரி மாவட்டத்தில் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட இரு பள்ளி வாகனங்களுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட இரு பள்ளி வாகனங்களுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் கதிா்வேல் உள்ளிட்டோா் திப்பம்பட்டி சந்திப்புச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த இரண்டு பள்ளி வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்ததில், இரு வாகனங்களின் தகுதிச் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த வாகனங்களுக்கு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரி ரூ. 5,000 மற்றும் இணைப்புக் கட்டணம், அபராதம் ரூ. 15,000 விதிக்கப்பட்டது.

இதேபோல, பிப். 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாள்கள் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட வாகனச் சோதனையில், சரக்கு வாகனங்கள், வேன்கள், ஆட்டோக்கள், பொக்லைன் இயந்திரம், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வாகனம் ஆகிய வாகனங்கள் காலாண்டு வரி, ஆண்டு வரி செலுத்தாதது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, வரி செலுத்தாத வாகனங்களுக்கு வரி மற்றும் இணக்கக் கட்டணம் என மொத்தம் ரூ. 1,41,260 வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.