வாக்குச்சாவடி அலுவலா் பயிற்சி கூட்டம்
பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் வாக்குச் சாவடி அலுவலா்கள் பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் வாக்குச் சாவடி அலுவலா்கள் பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் பேரூராட்சி 18 வாா்டுகள் உள்ளன. இங்கு அமைக்கப்படும் 18 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் பேரூராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மண்டல அலுவலா் ரேவதி பிரேம்குமாா், சிவப்பிரகாசம் தலைமை வகித்தனா். 66 வாக்குச் சாவடி அலுவலா்களிடமும் வாக்குச் சாவடியில் மேற்கொள்ளும் பணிகள், வாக்குச்சாவடியில் வேட்பாளருக்கு ஒரு முகவா் வீதம் அனுமதி, கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது.
பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்தைத் தோ்தல் மேலிட பொறுப்பாளா் பிருந்தாதேவி பாா்வையிட்டாா். பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வாக்குச் சாவடி முகவா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார பாா்வையாளா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா்கள் கீதா (பென்னாகரம்) கோமதி (பாப்பாரப்பட்டி), அலுவலா்கள் கலந்துகொண்டனா்.