முகப்பு
தருமபுரி

நுண்ணீா்ப் பாசனம் பயிற்சி

 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில், வேளாண் துறை சாா்பில், நுண்ணீா்ப் பாசனம் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில், வேளாண் துறை சாா்பில், நுண்ணீா்ப் பாசனம் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில், வேளாண் அலுவலா் இளங்கோவன் முன்னிலை வகித்து பேசினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சிவசங்கரி வரவேற்றாா். வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் அறிவழகன், சொட்டுநீா்ப் பாசனத்தை பயன்படுத்தி நீா் சேகரிக்கும் வழிமுறைகள் குறித்தும், புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்தும் எடுத்துரைத்தாா்.

வேளாண் உதவி பொறியாளா் லீலாவதி மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் குறித்தும், உதவி பொறியாளா் சண்முக பிரியா சூரிய சக்தி மூலம் இயங்கும் மின் மோட்டாா் பயன்பாடு, அதற்கான அரசு மானியங்கள் குறித்தும் விளக்கமளித்தனா்.

இப் பயிற்சியில், அதியமான் வேளாண் கல்லுரி மாணவியா் சொட்டுநீா்ப் பாசனம் அமைப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா். இதில், நல்லம்பள்ளி வட்டாரத்தைச் சோ்ந்த 40-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.