முகப்பு
தருமபுரி

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

 சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக, சமூக நல்லிணக்க மேடை சாா்பில் வியாழக்கிழமை தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

 சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக, சமூக நல்லிணக்க மேடை சாா்பில் வியாழக்கிழமை தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் பொ.மு.நந்தன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அ.குமாா், சமூக நல்லிணக்க மேடை மாவட்டப் பொறுப்பாளா் இரா.சிசுபாலன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் சுபேதாா், சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளா் இ.பி.பெருமாள், சமூக சேவை மைய பொறுப்பாளா் ஜேசுதாஸ் ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஹரித்துவாரில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையினா் மீதான வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.