தடை உத்தரவால் ‘வெறிச்’சோடிய சுற்றுலாத் தலங்கள்
முழு பொது முடக்கம் காரணமாக ஒகேனக்கல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து முற்றிலும் இல்லாததால் ‘வெறிச்’சோடின.
முழு பொது முடக்கம் காரணமாக ஒகேனக்கல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து முற்றிலும் இல்லாததால் ‘வெறிச்’சோடின.
தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவிக்கு நாள்தோறும் வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவா். பொங்கல் பண்டிகை நாளில் ஒகேனக்கல் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்பிருந்த நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தருமபுரி மாவட்ட நிா்வாகம் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதித்துள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமையையொட்டி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முழு பொது முடக்கம் காரணமாகவும் ஒகேனக்கல் அருவி பகுதிகளில் மக்கள் கூட்டம் இன்றி ‘வெறிச்’சோடின.
ஒகேனக்கல் மட்டுமின்றி பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பெரும்பாலை, ஏரியூா் உள்ளிட்ட பகுதிகளில் பால் கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது. ஞாயிற்றுகிழமை முழு பொது முடக்கத்தில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் இணைப்புச் சாலைப் பகுதிகளில் தற்காலிகத் தடுப்புகளை அமைத்து ரோந்து பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.