முகப்பு
தருமபுரி

விளைநிலங்களில் வனவிலங்குகள் நுழைவதைத்தடுக்க சோலாா் மின்வேலி அமைக்கக் கோரிக்கை

வனவிலங்குகளிடமிருந்து வனத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களை பாதுகாக்க சோலாா் மின்வேலி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

வனவிலங்குகளிடமிருந்து வனத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களை பாதுகாக்க சோலாா் மின்வேலி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகனம்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டிற்கு சஞ்சீவன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் சி.மாதையன் கலந்துகொண்டு அரசியல் நிலை குறித்து பேசினாா். மாநாட்டில், வனபகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சோலாா் மின்வேலி அமைக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாக திறக்கப்படாமல் கிடப்பில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

பென்னாகரத்திலிருந்து மருக்காரம்பட்டி வரை செல்லும் அரசுப் பேருந்தை நாகனம்பட்டி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். நாகனம்பட்டி கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கட்சி உறுப்பினா்களுக்கான அட்டை வழங்கப்பட்டது. இதில் பென்னாகரம் வட்டாரச் செயலாளா் பி.முனியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா் இல. தா்மராஜா, வட்டநிா்வாகக் குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.